Friday, 22 August 2014

சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா?

Hand mate
சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும் என்று சொல்லலாம். சாதாரண non-touch screen கொண்ட லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக கன்வர்ட் செய்யப் பயன்டும் சாதனம் உள்ளது.
Hand mate எனப் பெயரிடப்பட்ட இச் சாதனமான விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிப்பட்டது. இது சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதாக மாற்றக்கூடியது.
லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள சாதாரண திரைகளை Touch Screen ஆக மாற்றக்கூடிய ஒரு புரட்சிகரமான சாதனம் இது.
converts-nontouch-screen-to-touch-screen-handmate-windows-8-pen
விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில் இந்த Hand mate விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமானதொரு தேர்வாக இருக்கும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும்.
இதில் Infrared and Ultrasound Technology, Receiving unit மற்றும் Ultra soic digital ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment