Wednesday, 6 August 2014

கம்ப்யூட்டரை Shutdown செய்ய Power Button...

             Power button used to Shutdown computer

நம்மில் பெரும்பாலானோர் கணனியை தொடங்கவதற்கு மட்டுமே  POWER பட்டனை பயன்படுத்துகிறோம
                 கம்ப்யூட்டரை shutdown செய்ய முறையாக அனைத்து புரோகிராம்களையும் Close செய்து விட்டு, Start பட்டனை கிளிக் செய்து பிறகு அதில் உள்ள Shutdown ஆப்சனைப் பயன்படுத்தியே shutdown  செய்வோம்.
அவ்வாறில்லாமல் நேரடியாக  power பட்டனை அழுத்தியும் shutdown  செய்யலாம்.
முன்பு ஒரு காலத்தில் கணனியில் முறையாக ShutDown செய்யவில்லை எனில் Computer ரிப்பேர் ஆகிவிடும் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் தற்காலத்தில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்ககளில் உள்ள முக்கியமான உறுப்புகள் MotherBoard, cabinate போன்றவைகள் ATX வகையானதாக உள்ளது.
இந்த வகை கணினிகளில் பவர் பட்டனை அழுத்தியவுடன் அதிலுள்ள Software வழியாகவோ அல்லது செட்டிங்ஸ்களில் உள்ளபடிய Do Nothing அல்லது Sleep அல்லது Hibernate அலலது Suspend ஆகுமே தவிர மின் இணைப்புத் துண்டிக்கப்படாது.
Power பட்டனை அழுத்தும்பொழுது என்ன நடக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே செட்டிங்சை அமைத்துக்கொள்ளலாம். அதற்கு Control panel இல் Power Options சென்று choose what the power button do என்பதினை கிளிக் செய்து, when i press the power button என்பதில் Shutdown என்பதினை தேர்ந்தெடுக்கலாம். (இயல்பிருப்பாகவே Shutdown என்பதே தெரிவு செய்யப்பட்டிருக்கும்.)

இனி நீங்கள் அவசரமாக கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்ய வேண்டுமெனில் Power பட்டனை அழுத்தினால் போதுமானது. உங்களுடைய கம்ப்யூட்டர் பாதுகாப்பாக Shutdownஆகிவிடும்.
மறக்காமல் Control panel சென்று உங்களுடைய கம்ப்யூட்டரில் power options setting சரியாக உள்ளதா என சரிபாரத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment