Monday, 27 January 2014

விண்டோஸ் password பிரச்சினை இனி இல்லை

கணினிக்கு password கொடுப்பதன் பிரதான நோக்கம் நம்முடைய அனுமதியில்லாமல் யாரும் கணினியில் இருக்கக்கூடாது என்பதுதான்.இந்த நோக்கம் உண்மையாகவே நிறைவேற்றப்படுகின்றதா?இல்லையா? என்று பாருங்கள்.











உங்களுடைய password இல்லாமலும் கணினியில் மற்றவர் உள்நுளைய முடியும். எப்படி என்றால் நாம் இல்லாத சந்தர்பத்தில் password கேட்கும் போது மற்றவர் செய்வது இதுதான் அவர்கள் என்ன செய்வர்கள் என்றால் உங்களுடைய password கேட்கும் போது Ctrl + Alt + Del ஆகிய key களை press பன்னி பின்னர் தோன்றும் Log on Windows இல் யூசர் பெயராக Administrator கொடுத்து உங்கள் அனுமதியில்லாமல் உள்நுளைவார்கள்.அப்படி என்றால் நம்முடைய password இற்கு ஒரு மதிப்பும் இல்லையா? ஏன் இல்லை அதற்குத்தானே இந்த தலைப்பு.

இப்படி அனுமதியில்லமல் நுளைவதை தடுக்க வேண்டுமாயின் நீங்கள் மேலே உள்ளதைப்போன்று செய்து, Administrator இற்கும் password கொடுத்து வையுங்கள் இனி பிரச்சினை இல்லை.

அடிக்கடி என்னிடம் சில பேர் கேட்கும் கேள்விகள் கீழே உள்ளன உங்களுக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன்.

01.மேலே உள்ளது போன்று செய்யலாம் என்று போனா அந்த திருடர்கள் Administrator இற்கும் password கொடுத்து வைத்திட்டார்களே இப்ப என்ன செய்வது?

நீங்கள் இதற்கு எல்லாம் பயப்பட வேண்டாம் நாம் இருக்கும் போது இனி என்ன பயம், start > Run > control userpasswords2 என டைப் செய்த பிறகு, users for this computer என்ற தலைப்பின் கீழ் Administrator ஐ தெரிவு செய்து Reset Password என்ற Button ஐ click செய்யவும்,பின்னர் OK Button ஐ click செய்தால் சரி.




Administrator இற்கு திருடன் கொடுத்த password இனி இருக்காது

02.நம்முடைய passwordஉம் மறந்து போய் Administratorஇற்கும் கொடுத்த passwordஉம் மறந்து போனால் என்ன செய்வது?

இதற்கு பதில் தெரியாது இருந்தாலும் இது ஏற்படுவதற்கு முன் சில ஏற்பாடுகளை செய்தால் பதில் தெரியும் அந்த ஏற்பாடுதான் இது, Start > Control Panel > User Accounts > உங்களுடைய Account ஐ Click செய்யுங்கள்

Related Tasks >> Prevent a Forgotten Password ஐ Click செய்யவும்

இப்போது Forgotten Password Wizard உங்களுக்கு காட்சியளிக்கும்
Next Button ஐ Click செய்தீர்கள் என்றால் எந்த Driveல் Save பன்ன வேண்டும் என்று கேட்கும், நீங்கள் உங்களுடைய Pen Drive ஐ தெரிவு செய்து விட்டு, Next Button ஐ Click செய்யுங்கள்


 தற்போதுள்ள உங்களுடைய password ஐ கொடுத்தால் சரி,முன் ஏற்பாடு தயார்.


இவ்வளவும் செய்து வைத்தால் போதும் இனி உங்களுக்கு விண்டோஸ் password பிரச்சினை இருக்காது,முன் ஏற்பாடு செய்து வைத்தால் மட்டும் போதுமா?இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்


இனி உங்களுடைய Password பிழை என்று சொல்லும் செய்தியில் you can Use your password reset disk என்ற செய்தியும் தோன்றும் அதை கிளிக் செய்தீர்கள் என்றால்,Password Reset Wizard, உங்களுக்கு தோன்றும் நீங்கள் முன்னர் save பன்னிய Pen Drive ஐ செலுத்தி Password புதுப்பித்துக்கொள்ள முடியும்.
 


இனி உங்கள் நோக்கத்தை அடைந்து கொண்டு, விண்டோஸ் password பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

No comments:

Post a Comment