Wednesday, 29 January 2014

கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய ...

கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய


நாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்த ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி I.P எண் கொடுத்து வேறுபடுத்தி இருப்பார்கள். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள் அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். மற்றும் இதன் மூலம் நமக்கு வரும் மெயில்களை அவற்றின் அனுப்பிய IP எண்ணை வைத்து அந்த மெயிலின் உண்மை தன்மையை கண்டறியலாம்.


மென்பொருளை பயன் படுத்தும் முறை:
  • இதற்கு முதலில் கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Download செய்து கொள்ளுங்கள். 
  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
  • அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
  • இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம் இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணினி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
  • அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

கோப்புகளை மறைப்பது எப்படி? (without any software)

கோப்புகளை மறைப்பது எப்படி?





எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை எழுத்துபலகையைத்( Notepad ) திறந்து அதில் சேமிக்கவும். அந்த வாக்கியங்களில் இருக்கும் "type your password here" என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு உங்களுக்குத் தேவையான கடவுச்சொல்லை வழங்குங்கள் (மேற்கோள்கள் இன்றி தரவும்). இதை எந்தக்காரணம் கொண்டும் மறக்க வேண்டாம். அந்த கோப்பை ஏதாவது ஒரு பெயர் கொடுத்து *.bat கோப்பாக சேமிக்கவும். உதாரணமாக hide.bat என கோப்பின் பெயரைக்கொடுத்து சேமிக்கவும்.

----------------------------------------------------------
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%=="type your password here" goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
-------------------------------------------------------------

நீங்கள் சேமித்த hide.bat கோப்பை இரண்டு முறை சொடுக்கினால் Locker என்ற ஃபோல்டர் உங்கள் கண்களுக்குத் தென்படும். நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்குள் சேமியுங்கள்.

இப்போது மீண்டும் hide.bat கோப்பினை இரண்டு முறை சொடுக்குங்கள். 'கோப்பினைப் பூட்டிவிடவா' என செய்தி வரும் MSDOS செய்திப்பெட்டியில் y என தட்டச்சு செய்தால் Locker மறைந்து விடும்.

மறைந்த Locker-ஐ காண விரும்பினால் மீண்டும் hide.bat என்ற கோப்பை இரண்டு முறை சொடுக்குங்கள். கடவுச்சொல்லைத் தரும்படி கேட்கும் செய்திப்பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை தாருங்கள். Locker உங்கள் கணனி திரையில் வரும்.

Tuesday, 28 January 2014

கூகுள் தேடலில் ஏற்கனவே பார்த்த பக்கங்கள் மீண்டும் வருவதை தவிர்க்க....


இணையத்தில் கொட்டி கிடக்கும் தகவல்களை நொடிப்பொழுதில் நமக்கு வழங்கும் தேடியந்திரங்களில் கூகுளின் சேவை சிறப்பானதே. கூகுளில் ஏதேனும் தீவிர மாக தேடி கொண்டிருக்கும் பொழுது நாம் ஏற்க்கனவே பார்த்த பக்கங்களும் சேர்ந்தே வரும். இதனால் ஒரே பக்கத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டிய சூழல் உண்டாவதுடன் நமக்கு தேவையான தீர்வை கண்டறிய அதிக நேரம் செலவழிக்க வேண்டியாகி உள்ளது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஏற்க்கனவே பார்த்த பக்கங்களை மறுபடியும் கூகுள் தேடலில் காட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கீழே பாப்போம்.

இதற்க்கு கூகுளில் ஒரு வசதி உள்ளது. கூகுள் தேடியந்திரத்தில் தேடிகொண்டிருக்கும் பொழுது அதே பக்கங்களை மறுபடியும் வருவதை தவிர்க்க கூகுள் பக்கத்தில் Search Tools என்பதை கிளிக் செய்யுங்கள். 



அதை கிளிக் செய்த உடன் சில தேடல் வசதிகள் வரும் அதில் Not Yet Visited என்பதை கிளிக் செய்தால் போதும் ஏற்கனவே பார்த்த பக்கங்களை நீக்கி புதிய தேடல் முடிவுகளை கூகுளில் காணலாம். 
இந்த முறையில் ஏற்க்கனவே பார்த்த பக்கங்களை தவிர்த்து சரியான முடிவுகளை பெறலாம்.

குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க ...


 Google chrome,FireFox பயனர்கள் எந்த நீட்சியின் உதவியின்றி சுலபமாக இணைய பக்கங்களை PDF பைல்களாக தங்களுடைய கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதற்க்கான வழிமுறையை கீழே பார்ப்போம்.

  • முதலில் chrome அல்லது FireFox உலவியில் நீங்கள் PDF பைலாக மாற்ற இருக்கும் இணைய பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். 
  • அடுத்து CTRL + P என்பதை ஒருசேர அழுத்துங்கள். 
  • உங்களுக்கு Print Dialogue விண்டோ வந்திருக்கும் அதில் Destination பகுதியில் Save as PDF என்று இருக்கிறதா என பார்த்து கொள்ளவும். இல்லை என்றால் Change பட்டனை அழுத்தி Save as PDF வசதியை தேர்வு செய்து கொள்ளவும்.

  • இப்பொழுது மேலே உள்ள படத்தில் அம்பு குறியிட்டு காட்டியிருக்கும் Save பட்டன் மீது கிளிக் செய்தால் அந்த இணையப்பக்கம் PDF பைலாக உங்கள் கணினியில் சேமிக்கப்படும்.
இனி எந்த நீட்சியின் உதவியுமின்றி குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்...

PDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மாற்ற


PDF பைல்களை எப்படி நாம் இமேஜ் பைல்களாக மாற்றுவது என்று இங்கு காணபோகிறோம். இந்த வேலையை ஒரு சிறிய மென்பொருள் நமக்கு எளிதாக செய்து முடிக்கிறது.
இந்த மென்பொருள் பதிவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள் ஏனென்றால் நாம் ஏதேனும் PDF பைல்களை நம் பதிவில் சேர்க்க வேண்டுமென்றால் அதனை நேரடியாக சேர்க்க முடியாது அந்த பைல்களுக்கான Embeded உருவாக்க இன்னொரு தளத்தின் உதவியை நாட வேண்டிவரும். அதனால் நம் நேரம் தான் விரயம் ஆகும்.  அது மட்டுமில்லாமல் இன்னொரு தளத்தில் உறப்பினர் ஆக வேண்டும். இந்த குறையை தவிர்க்கவே இந்த அரிய மென்பொருள்.
மென்பொருளின் பயன்கள்: 

  • மிகச்சிறிய அளவே உடைய(1.9mb) முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • மற்ற கன்வெர்ட் மென்பொருட்களை காட்டிலும் 87% வேகமாக இயங்க கூடியது.
  • பேட்ச் மோடில் இயங்க கூடியது.
  • இந்த முறையில் நாம் Jpg, Gif, Bmp, Tif, Png ஆகிய பார்மட்களில் மாற்றி கொள்ளலாம்.
  • தேவையான பக்கத்தை மட்டும் தேர்வு செய்து மாற்றும் வசதி உள்ளது. 
  • ஒரு போல்டரை அப்படியே கொடுத்து மாற்றும் வசதி.
  • Windows 2000, XP, Vista or 7 ஆகிய இயங்கு தளங்களில் வேலை செய்கிறது.
பயன் படுத்தும் முறை: 
  • உங்களுக்கு வரும் exe பைலை உங்கள் கணினியில் Install செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் ADD என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.
  • கடைசியில் கீழே/மேலே  உள்ள CONVERT என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் PDF பைல் நீங்கள் தேர்வு செய்த இமேஜ் வடிவில் வந்து இருக்கும்.
  • அவ்வளவு தான் நீங்கள் நேரடியாக உங்கள் இமேஜ் பைலை உங்கள் தளத்தில்  தரவேற்றி கொள்ளலாம்.

கூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட...




இணையத்தில் கூகுள் என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை தான் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் தவிர்க்க முடியாத வசதி கூகுள் தேடியந்திரம்(Search Engine). கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை.  அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை.
PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோக படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் நமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம்.
  • நீங்கள் முதலில் Google தளத்திருக்கு செல்லுங்கள்.
  • நீங்கள் தேடுவதற்கு பொருத்தமான வார்த்தையை கொடுத்து அதற்கு அருகே Filetype:pdf என்று கொடுக்கவும். 
  • பின்பு search பட்டனை அழுத்தவும். 
  • இப்பொழுது  உங்களின் தேடலின் முடிவுகள் அனைத்தும் PDF பைல்களாகவே வந்திருக்கும். 
  • இதை உறுதி படுத்தும் வண்ணம் அனைத்து முடிவுகளுக்கு முன்னும் [PDF] என்று 
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்க. 


இனி உங்களஉங்களுக்கு தேவையான  PDF பைலை தேடி பெறலாம்...
 .

Monday, 27 January 2014

விண்டோஸ் password பிரச்சினை இனி இல்லை

கணினிக்கு password கொடுப்பதன் பிரதான நோக்கம் நம்முடைய அனுமதியில்லாமல் யாரும் கணினியில் இருக்கக்கூடாது என்பதுதான்.இந்த நோக்கம் உண்மையாகவே நிறைவேற்றப்படுகின்றதா?இல்லையா? என்று பாருங்கள்.











உங்களுடைய password இல்லாமலும் கணினியில் மற்றவர் உள்நுளைய முடியும். எப்படி என்றால் நாம் இல்லாத சந்தர்பத்தில் password கேட்கும் போது மற்றவர் செய்வது இதுதான் அவர்கள் என்ன செய்வர்கள் என்றால் உங்களுடைய password கேட்கும் போது Ctrl + Alt + Del ஆகிய key களை press பன்னி பின்னர் தோன்றும் Log on Windows இல் யூசர் பெயராக Administrator கொடுத்து உங்கள் அனுமதியில்லாமல் உள்நுளைவார்கள்.அப்படி என்றால் நம்முடைய password இற்கு ஒரு மதிப்பும் இல்லையா? ஏன் இல்லை அதற்குத்தானே இந்த தலைப்பு.

இப்படி அனுமதியில்லமல் நுளைவதை தடுக்க வேண்டுமாயின் நீங்கள் மேலே உள்ளதைப்போன்று செய்து, Administrator இற்கும் password கொடுத்து வையுங்கள் இனி பிரச்சினை இல்லை.

அடிக்கடி என்னிடம் சில பேர் கேட்கும் கேள்விகள் கீழே உள்ளன உங்களுக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன்.

01.மேலே உள்ளது போன்று செய்யலாம் என்று போனா அந்த திருடர்கள் Administrator இற்கும் password கொடுத்து வைத்திட்டார்களே இப்ப என்ன செய்வது?

நீங்கள் இதற்கு எல்லாம் பயப்பட வேண்டாம் நாம் இருக்கும் போது இனி என்ன பயம், start > Run > control userpasswords2 என டைப் செய்த பிறகு, users for this computer என்ற தலைப்பின் கீழ் Administrator ஐ தெரிவு செய்து Reset Password என்ற Button ஐ click செய்யவும்,பின்னர் OK Button ஐ click செய்தால் சரி.




Administrator இற்கு திருடன் கொடுத்த password இனி இருக்காது

02.நம்முடைய passwordஉம் மறந்து போய் Administratorஇற்கும் கொடுத்த passwordஉம் மறந்து போனால் என்ன செய்வது?

இதற்கு பதில் தெரியாது இருந்தாலும் இது ஏற்படுவதற்கு முன் சில ஏற்பாடுகளை செய்தால் பதில் தெரியும் அந்த ஏற்பாடுதான் இது, Start > Control Panel > User Accounts > உங்களுடைய Account ஐ Click செய்யுங்கள்

Related Tasks >> Prevent a Forgotten Password ஐ Click செய்யவும்

இப்போது Forgotten Password Wizard உங்களுக்கு காட்சியளிக்கும்
Next Button ஐ Click செய்தீர்கள் என்றால் எந்த Driveல் Save பன்ன வேண்டும் என்று கேட்கும், நீங்கள் உங்களுடைய Pen Drive ஐ தெரிவு செய்து விட்டு, Next Button ஐ Click செய்யுங்கள்


 தற்போதுள்ள உங்களுடைய password ஐ கொடுத்தால் சரி,முன் ஏற்பாடு தயார்.


இவ்வளவும் செய்து வைத்தால் போதும் இனி உங்களுக்கு விண்டோஸ் password பிரச்சினை இருக்காது,முன் ஏற்பாடு செய்து வைத்தால் மட்டும் போதுமா?இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்


இனி உங்களுடைய Password பிழை என்று சொல்லும் செய்தியில் you can Use your password reset disk என்ற செய்தியும் தோன்றும் அதை கிளிக் செய்தீர்கள் என்றால்,Password Reset Wizard, உங்களுக்கு தோன்றும் நீங்கள் முன்னர் save பன்னிய Pen Drive ஐ செலுத்தி Password புதுப்பித்துக்கொள்ள முடியும்.
 


இனி உங்கள் நோக்கத்தை அடைந்து கொண்டு, விண்டோஸ் password பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

விண்டோஸிற்க்கான அருமையான காலண்டர் கருவி!

Rainlendar: விண்டோஸிற்க்கான அருமையான காலண்டர் கருவி!

விண்டோஸ் Vista/7 இயங்குதளங்களில் உள்ளது போன்று, Calendar Gadget விண்டோஸ் எக்ஸ்பியில் இல்லை. இதனை ஈடு செய்ய பல கருவிகள் இருந்தாலும், Rainlendar Lite  எனும் இலவச (இதன் Pro Version ஐ பணம் செலுத்தி வாங்க வேண்டும்) மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த Gadget உடன் Events மற்றும் To Do: ஆகிய இரண்டு வசதிகளும் இருப்பது சிறப்பு. இதனை டெஸ்க்டாப்பில் தேவையான பகுதிக்கு நகர்த்திக் கொள்ளலாம். மேலும் இதனை வலது க்ளிக் செய்து, New Event மற்றும் New Task ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.



தேவையான சமயத்தில் நோட்டிபிகேஷன், அலாரம் ஆகிய வசதிகளும் நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.


Event மற்றும் Task கள் டாஸ்க் பாரில் பலூன் அறிவிப்புகளாக தெரியும்.


இந்த காலண்டரின் தோற்றம் மற்றும் opacity ஆகியவற்றை வலது க்ளிக் செய்து Options பகுதிக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

போட்டோக்களை வீடியோவாக மாற்ற ...






நம்மிடம் உள்ள  முக்கியமான  எமது போட்டோக்களை வீடியோவாக மாற்றினால் எவ்வளவு நலமாக இருக்கும்.  இதனைத்தான்இந்த மென்பொருள் செய்கிறது. 

Download link
முதலில் மென்பொருளை திறந்து கொள்ளவும்அதன்பின் Add Media யாவை தெரிவுசெய்து தேவையான படங்களை சேர்துகொள்ளவும் பின்பு Media List இல் உள்ள படங்களை தெரிவு செய்யவும். இதன் பின் Apply தெரிவு செய்யவும். அதன் பின் Down அம்புக்குறியை தெரிவுசெய்யவும்.இவ்வாறு
ஒன்றன்பின்ஒன்றாக படங்களைதெரிவு செய்ததின் பின் உருவான வீடியோவினை அருகில் உள்ள  பகுதியில் Playயை தெரிவு செய்வதன்மூலம் பார்வையிட முடியும்.

 பின்பு உருவான  Videoவை Save Movieயை தெரிவு செய்வதன் மூலம் Save பண்ண முடியும் இவ் Videoவை Disc, Computer portable Device,Image sequence,Youtube, போன்ற இடங்களில avi,wmv,asf,mpg,3gp,mp4,mov,flv,swf போன்ற வடிவில் Save பண்னி பார்க்க முடியும். இவ் மென்பொருள் இன்னும் பல வசதிகளை கொண்டுள்ளதுபயன்படுத்திபாருங்கள்...

Sunday, 26 January 2014

வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள் இலவசமாக


நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர்,

அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு ப்ளேயர், 

வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற ஒரு ப்ளேயர்,

உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற ஒரு ப்ளேயர்,

போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற ஒருப்ளேயர் என்று பலதரப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவோம்.


இதன்மூலம் காலநேரமும் கணிணியில் செய்திறன் மற்றும் வன் தட்டின் இடமும் அதிகரிக்கும் ஸ்டார்ட் மெனுவில் அது ஒரு நீளத்திற்கு தனியாக இடத்தினை அடைத்துக் கொண்டிருக்கும்.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு நான்கு மென்பொருள் என்ஜினியர் சேர்ந்து ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்திருக்கின்றனர். இந்த மென்பொருளின் பெயர் மீடியா கோப்.

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்

வீடியோ - mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv, vob இது சில மட்டுமே இன்னும் நிறைய 

சப்டைட்டில் இல்லாத திரைப்படங்களில் சப்டைட்டில் தனியாக சேர்க்க முடியும்.

மேற்கூறிய அனைத்து கோப்புகளும் வீடியோ மாற்றியாக செயல்படும்.  இந்த கோப்புகளிலிருந்து எம்பி3 பிரித்தெடுக்க முடியும்.

புகைப்படங்கள் -  jpg, bmp, gif, tiff, png, emf, wmf

மென்பொருளின் அளவு 7.92 எம்பி மட்டுமே.

முற்றிலும் இலவசம் மென்பொருள்

மென்பொருள் தரவிறக்க   >>>>>>      சுட்டி    <<<<<<

Computer வேகமாக Open ஆக வேண்டுமா...



உங்கள் கணினியில் நிறைய SOFTWARES  நீங்கள் INSTALL செய்து இருப்பீர்கள். அவற்றில் சில Computer ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே START ஆகி இருக்கும். இதனாலேயே COMPUTER தொடங்க தாமதமாகும். இதனை சரி செய்ய எந்த SOFTWARE உம் தேவையில்லை.

Run Window வை திறந்து msconfig என Type செய்யவும்.


இப்போது கீழே உள்ள விண்டோ வரும். அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்




இதில் உங்கள் COMPUTER  ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத PROGRAM இருந்தால் அதனை DISABLE செய்து இப்போது OK கொடுத்து விடவும்.


குறிப்பு - AntiVirus போன்ற முக்கியமானது மட்டும் இருக்கட்டும். மற்றவைகளை DISABLE  செய்து விடுங்கள்.
இப்போது RESTART செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள்.Computer Speed ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.

Wednesday, 1 January 2014

Chrome உலாவிக்கான Short Cuts...

 









இன்று சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது.


லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.

1. கீ போர்ட் ஷார்ட்கட் பயன்பாடு:

மவுஸ் வழியாக மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள் மூலமாகவும், பல செயல்பாடுகளை குரோம் பிரவுசரில் மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+1 தொடங்கி, கண்ட்ரோல் + 8 வரை அழுத்தினால், பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள இணைய தளங்களை அந்த எண் வரிசையில் இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.

இதன் செட்டிங்ஸ் மாற்ற ஆல்ட்+எப் அல்லது ஆல்ட் +இ (Alt +F / Alt+E) பயன்படுத்தலாம்.

Ctrl+D அப்போதைய இணைய தளத்திற்கு புக்மார்க் அமைக்கிறது. Ctrl+H குரோம் ஹிஸ்டரியைத் தருகிறது.

Ctrl+J டவுண்லோட்ஸ் பிரிவிற்குச் செல்கிறது. Ctrl+K அட்ரஸ் பார் வழியே, மிக வேகமான தேடலுக்கு வழி தருகிறது. தேடலுக்கான சொல்லை அமைத்து என்டர் தட்டினால் போதும்.

Ctrl+N புதிய விண்டோ திறக்கப்படுகிறது.

Ctrl+Sht+D அப்போது திறக்கப்பட்டிருக்கும் அனைத்து டேப்களையும், ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கிறது.

Ctrl+Sht+N இன் காக்னிடோ எனப்படும், செயல்பாடுகளைப் பின்தொடராத தனி நபர் பயன்பாட்டிற்கு வழி கிடைக்கிறது.

Ctrl+Sht+T மூடப்பட்ட ஒரு டேப்பினைத் திறக்கிறது. இப்படியே இறுதியாக மூடப்பட்ட பத்து டேப்களை, அவற்றில் இயங்கிய இணையதளங்களுடன் திறக்கலாம். இவை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள். இது போல இன்னு

குரோம் உலாவிக்கான Short Cuts...

ம் நிறைய பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. நாம் பயன்படுத்தும் எக்ஸ்டன்ஷன் அல்லது அப்ளிகேஷன்களுக்கு, நாமாகவும் ஷார்ட் கட் கீ தொகுப்பினை அமைக்கலாம்.

Alt+F/Alt+E மூலம் குரோம் மெனு சென்று Settings | Extensions பிரிவில் இச்செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

2. செயல் தளங்கள் செல்ல குறுக்கு வழி:

குரோம் பிரவுசர் அட்ரஸ் பார் வழியாகவே, சில செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய தளங்களை நமக்குக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, chrome://bookmarks என டைப் செய்து புக்மார்க்ஸ் பக்கத்திற்குச் செல்லலாம். chrome://setting என்பது செட்டிங்ஸ் பக்கத்தினைத் திறந்து கொடுக்கும்.

இதே போல எக்ஸ்டன்ஷன் பக்கம் திறக்க chrome://extensions என அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் செய்திட வேண்டும். ஹிஸ்டரி பக்கம் கிடைக்க chrome://history என அமைக்க வேண்டும். இந்தச் சொற்களை புக்மார்க் ஆக சேவ் செய்து, அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்து பெறலாம்.

3. புதிய டேப் தரும் வசதிகள்:

குரோம் பிரவுசரில், புதிய டேப் மற்ற பிரவுசர்கள் தராத சில வசதிகளைக் கொண்டுள்ளது. புதிய டேப் பக்கத்தினை Ctrl+T அழுத்தியோ அல்லது குரோம் பிரவுசர் திறக்கப்பட்டவுடனேயோ பெறலாம். இங்கு நீங்கள் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன்கள், அப்போது மூடப்பட்ட தளங்கள், வெப் ஸ்டோர் என அனைத்தும் காட்டப்படுகின்றன. இவற்றில் தேவை யானதைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.

4. பிரவுசருக்கான டாஸ்க் மானேஜர்:

விண்டோஸ் சிஸ்டத்திற்கு இருப்பதைப் போல, குரோம் பிரவுசர் தன் செயல் பாட்டினைக் கண்காணிக்க, தனியே ஒரு டாஸ்க் மானேஜரைக் கொண்டுள்ளது. இதனை, Shift+Esc கீகளை அழுத்திப் பெறலாம்.

இதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்படுகிறது, சி.பி.யு.நிலை, இணையத்திலிருந்து பெறப்பட்ட பைட்ஸ், அனுப்பப்பட்ட பைட்ஸ் அளவு, டேப்ஸ், அப்ளிகேஷன்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பிரவுசர் இயங்குவதில் பிரச்னை ஏற்படுகையில், சிக்கல் எங்கு என அறிந்து தீர்ப்பது எளிதாக இருக்கும்.

5. தடயம் அறியா இணைய உலா:

குரோம் பிரவுசர் இன் காக்னிடோ என்ற வகை பிரவுசிங் வசதியினைத் தருகிறது. இதனை இயக்கி, இணைய தளங்களைப் பார்வையிடுகையில், அவை குறித்த தகவல்களை குரோம் பிரவுசர் குறித்து வைக்காது. நாம் தேடும் தளங்களை, அதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பிறர் அறிந்து கொள்ளாமல் இருக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். Ctrl+Shift+N அழுத்தி இந்த வகை பிரவுசிங் செயல் பாட்டினை மேற்கொள்ளலாம்.

6. ஆம்னிபாக்ஸ் தேடல்:

குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரை, தேடல் கட்டமாகப் பயன்படுத்தி, நாம் இணையத் தேடலை மேற்கொள்ளலாம். இதனால், தேடல் வேகம் அதிகரிக்கிறது. தேடும்போது இந்தக் கட்டத்தினை ஆம்னிபாக்ஸ் (Omnibox) என குரோம் அழைக்கிறது.

7. டேப்களை மாற்றி அமைக்க:

குரோம் பிரவுசரின் டேப்கள் நிலையானது அல்ல. நம் வசதிப்படி அவற்றின் இடத்தை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் சில தின இதழ்களின் டேப்களை அடுத்தடுத்து அமைத்துப் பார்க்க விரும்பினால், அவற்றை இழுத்து வரிசையாக அமைத்துக் கொள்ளலாம். டேப்கள் அதிகம் இடம் எடுத்துக் கொள்ளாத வகையில் அட்ரஸ் பாருக்குக் கீழாக பின் அப் செய்தும் வைக்கலாம்.

8. தானாகத் தளங்கள் திறக்கப்பட:

குறிப்பிட்ட இணைய தளங்களை, பிரவுசர் திறந்தவுடன் திறந்து பயன்படுத்துபவரா நீங்கள்? அவ்வாறெனில், பிரவுசர் திறக்கும் போதே, இவையும் திறக்கும் வகையில் செட் செய்திடலாம். இதற்கு, Alt +F/Alt+E அழுத்தி செட்டிங்ஸ் பக்கம் செல்லவும். இங்குள்ள On Startup என்ற பிரிவில், Open A Specific Page Or Set Of Pages என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Set Pages என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். நீங்கள் இங்கு அமைத்திடும் தளங்கள் அனைத்தும், பிரவுசர் திறக்கப்படுகையில் திறக்கப்படும். அதேபோல, எந்த இணையதளம் பார்த்துக் கொண்டிருக்கையில், பிரவுசர் மூடப்பட்டதோ, அதே இணையதளத்துடன் மீண்டும் பிரவுசரைத் திறக்கும் வகையிலும் செட் செய்திடலாம். செட்டிங்ஸ் பிரிவில், Continue Where I Left Off என்பதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்தால் போதும்.

9. பின் தொடராதே:

அண்மையில் வந்துள்ள குரோம் பிரவுசர் 23 பதிப்பில், நாம் காணும் இணைய தளம் குறித்த தகவல்களை பிரவுசர் தொடராமல் இருக்கும்படி செய்திட வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதி Do Not Track என, அல்லது சுருக்கமாக DNT என அழைக்கப்படுகிறது. மேலே சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும், குரோம் பிரவுசரைத் தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு நேரத்தை மிச்சப் படுத்துவதுடன், இணைய உலாவினை எளிதாகவும், மனம் விரும்பும் வகையிலும் அமைத்திடும்.


 By: Nava