Tuesday, 31 December 2013

கணனியின் நினைவகமாக RAM-யை சிறந்த நிலையில் பாதுகாக்க உதவும் மென்பொருள்







SHARE THIS
TAGS
கணனியின் செயற்பாட்டில் பிரதான நினைவகமானது மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தொடர்ச்சியாக பல நாட்கள் இயங்கும்போது அதன் செயற்பாட்டில் மந்த நிலை ஏற்படுகின்றது.
இதனை சரிசெய்வதற்கு Max RAM Optimizer எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருள் மூலம் சீரான கால இடைவெளியில் பிரதான நினைவகத்தினை சரிபார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
click to download software here>>தரவிறக்கச் சுட்டி

Monday, 30 December 2013

கணினி பற்றிய தகவல்கள்

முதலாவதாக Ram  பற்றி பார்ப்போம்.....

RAM என்பதை Random Access Memory என்றும் அழைப்பார்கள்

Ram என்பது தகவல்களைச் சேமித்துவைக்கும் ஓர் சேமிப்பிடமாகும். இந்த Ram தகவல்களை நிரந்தரமாக கனனியில் சேமித்து வைக்கமாட்டாது கனனி இயங்கிக் கொண்டு இருக்கும் போதுதான் இதன் சேமிப்புத் தன்மை இருக்கும் கனனி இயக்கத்தில் இல்லவிடின் இதன் இயக்கமும் முடிவடைந்து விடும். மின்சக்தி இருக்கும் போது தன்னகத்தே தகவல்களை வைத்திருக்கும் மின்சக்தி இல்லாதபோது தன்னகத்தேயுள்ள சக்திகளை இழந்துவிடும். எனவே அது ஒரு தற்காலிக சேமிப்பு இடமாகும். இதன் தொழிற்பாடு எனக் கூறும்போது கனனியை ஆரம்பித்ததும் மிகவிரைவாக நிகழ்வுகளை திரைக்கு கொண்டுவந்து விடுவதாகும் Ram அளவு அதிகமாக இருக்குமாயின் திரைக்கு நிகழ்வுகளை மிகவிரைவாகக் கொண்டு வரலாம். எனவே உங்கள் கனனிகளில் கொள் அளவு அதிகமாக அளவுகளை
பொருத்துவதன் மூலம் கனனி மிக விரைவாக இயங்கும் தன்மையை அடையும்.

அத்துடன் ஒரே நேரத்தில் பல மென்பொருட்களைத் (Program) திறந்து வேலை செய்யக்கூடியதாக இருக்கும்


இந்த Ram அள்வீட்டு முறையில்தான் கணிக்கபடுகிறது. அதாவது இன்று பாவனையில் உள்ள Ram இன் அளவுகள் 8Mb,16Mb,32Mb,64Mb,128Mb,256Mb, 512Mb, 1024GB என அளவிடப்படுகின்றது Ram இன் வகைகள் பொறுத்தமட்டில் அவை பிவருமாறு வகைப்படுத்தபடுகின்றது

1.FP Ram- Fast Page Ram
2.Edo Ram- Enhanced Data Oatout Ram
3.Sdram- Synchronous Momory Module
4.Dimm- Dual Inline Momory Module
5.DRDRAM-Direcct Rambus Dynamic Ram
6.DDR-RAM- Double Date Rate


அளவுகளை பொறுத்தமட்டில்

1.Edo Ram- 8Mb,16Mb,32Mb,64Mb,128Mb

2.SDRAM- 32Mb,64Mb,128Mb என இவை கூடிச்செல்கின்றன.

3.SDRAM - ஐ பொறுத்தமட்டில் Pc 66,Pc100,Pc133 MHZ என அளவிடப்படும்

4.DDR RAM- 128Mb,256Mb,512Mb,1024GB, எனக் கூடிச்செல்கின்றதுஐ பொறுத்தமட்டில் இது மற்றய RAMகளில் இருந்து வேறுபடுகிறது
அதாவது RAMகள் தகவல்களை ஒவ்வொன்றாகத்தான் காவிச்செல்லும் தன்மை கொண்டவை

ஆனால் DDR RAM மிக வேகம் கூடியதும் ஒரே நேரத்தில் இரண்டு தகவல்களை எடுத்துச் செல்லும் தன்மை கொண்டதாகவும் உள்ளது

கணனிகளை சிறந்த நிலையில் பராமரிக்க உதவும் மென்பொருள்


கணனிகள் தொடர்ச்சியாக பாவனை செய்யப்படும்போது அவற்றில் கோளாறுகள் ஏற்படுவதுடன் அவற்றின் வேகம் மந்த நிலையை அடைதல் வழமையான ஒன்றாகும்.
இப்பிரச்சினையிலிருந்து விடுபட பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றினைப் போன்றே PC Shower 2014 எனும் மென்பொருளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம் மென்பொருளினைப் பயன்படுத்தி அநாவசியமானதும் தற்காலிகமானதுமான கோப்புக்களை நீக்க முடிவதுடன், கணனியில் ஏற்படக்கூடிய கோளாறுகளையும் இலகுவாக சரிசெய்யக்கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய கணனிகள், டேப்லட்கள், மடிக்கணினிகள் போன்றவற்றிலும் இந்த மென்பொருளினைப் பயன்படுத்த முடியும்.