Wednesday, 11 May 2016

மெயில்லருந்து Software, Zip Files அனுப்ப முடியாம இருக்கா???




பொதுவா நீங்க மெயிலில் இருந்து photos, document files, PDF files, Software Files, Zip Files எல்லாம் அனுப்புவீங்க..ஆனா சிலநேரம் இந்த  Software Files, Zip Files ரெண்டும் அனுப்பும் போது இந்த ERROR வரும்...FILE SENT ஆகாது..

இவ்வாறு ERROR வந்தால் எப்படி அந்த FILE களை அனுப்புவது என்று பாப்போம்.
முதலில் அந்த file உள்ள இடத்துக்கு சென்று ....அதன் Extension ஐ நீக்க வேண்டும்..அதற்கு பின்வரும் முறையை பின்பற்றவும்...
file Explorer இல் view இல் file extension option ஐ tic செய்து....



அதன் பெயரில் உள்ள .exe ஐ நீக்குங்கள்...


அவ்வாறு செய்யும் போது தோன்றும் மெனுவில் YES ஐ க்ளிக் செய்யுங்கள்..



இப்போது அந்த FILE NORMAL பைலாக கருதப்படும்..இனி அந்த FILE ஐ UPLOAD செய்யலாம்...

இப்போது FILE ஏற்றுக்கொள்ளப்பட்டது...


அந்த file ஐ பெறுபவர் அதை SOFTWARE பைலாக மாற்ற அந்த பைலுக்குரிய extension ஐ இட்டு பயன்படுத்தி கொள்ளலாம்... அதாவது அந்த FILE இன் பெயருக்கு பின்னால் (.exe) என இடுவதன் மூலம் அதனை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி பயன்படுத்த முடியும்..



குறிப்பு:- ஒவ்வொரு FILE க்கும் extension வேறுபடும்...என்பதை கவனத்தில் கொள்க.

உதாரணத்திற்கு    SOFTWARE FILEக்கு .exe  உம்
                                       ZIP  FILEக்கு .zip  உம்
                                       PDF FILE க்கு .pdf    ஆக இருக்கும்..



நன்றி.

Monday, 17 August 2015

Laptop வேகத்தை இவ்வாறும் அதிகரிக்கலாம்...

உங்களின் கணினியில் இடம் போத வில்லை என புதிதாக ஒரு HardDisk வாங்கினால் நல்லது என நினைக்கிறீர்களா?  புதிதாக ஒரு 500 GB அல்லது 1 TB  வாங்கி வைக்கலாம் என ஒரு யோசனை வைத்திருந்தால் அதை சற்று தள்ளிப் போடுங்கள்.
அல்லது., கணினியின் செயலி (Processor) மெதுவாக உள்ளது என புதிய  Core i7 / Core i5 Processor  வாங்கி மேம்படுத்துதலை விட ஒரு 120 GB SSD  வாங்கி அதில் உங்களின் Windows + Softwaresஐ பதியும் போது உள்ள வேக மாற்றம் சமமாக இருக்கும்.


நாம் பொதுவாக வாங்கும் IDE, SATA, SATA2  Harddisk அல்லாமல் ஒரு SSD  வாங்குவது பற்றி யோசியுங்கள்.
நீங்கள் ஒரு புதிய SSD வாங்கி அதில் உங்களின் OS மற்றும் அனைத்து மென்பொருள்களையும் (Photoshop, Coral, AutoCad, 3D Studio Max) போன்ற அதிக செயல் திறன் வேண்டிய அனைத்து மென்பொருளையும் அதிலேயே பதியுங்கள் (Install).
இப்போது உங்களின் கணினியில் இரண்டு Harddisk இருக்கும். SSD இல் OS & Software installations. ஏற்கனவே இருந்த Harddiskஇல் பாடல்கள் மற்றும் படங்கள் போன்ற அதிகம் பயன்படுத்தாத (மென்பொருள்கள் மூலம் எடிட்டிங் வேலைகள் செய்யாமல்.. வெறுமனே கேட்பதர்க்கு / பார்ப்பதற்கு மட்டும் பயன்படும் Media கோப்புகள்)
பொதுவாக நமது கணினி மெதுவாக இருப்பதன் முக்கிய காரணம் அதன் Harddiskஇன் திறன்.
Kingston , Corsair, Intel, Samsung  போன்ற பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குங்கள். விலை சாதாரண Harddiskஐ விட அதிகமாகவே இருக்கும். ஆனால் வாங்கியபின் அதன் வேகம் உண்மையிலேயே பிரமிக்கும் வகையில் இருக்கும்.
                                         
SSD vs HDD

SSD வேகமானது என்பதற்கு என்ன காரணம்?
பொதுவாக நமது வன் தட்டுகள் (harddisk) உள்ள சில தட்டுகள் (Disks.. similar like our DVDs) இருக்கும்.. அதில் தரவுகளை (Data) எழுதுதல் மற்றும் படித்தல் வேலைகள் (Read & Write operations) நடக்கும். ஆனால் SSD களில் அதன் உள்ளே RAM களில் இருப்பது போல Chipகளே இருக்கும். இதனால் இதில் செய்யப்படும் வேலைகளின் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும்.


Friday, 14 August 2015

நீங்களே ஒரு Shutdown -Timer ஒன்றை உருவாக்கலாம்..

வணக்கம் நண்பர்களே... பொதுவாக கணினியை Power-On பண்ணினால் shutdown செய்து தான் ஆக வேண்டும்,அனால் நம்மில் பலர் நித்திரை வந்து விட்டால் ஒன்றையும் யோசிக்காமல் கணனியை அப்படியே இயங்கியபடி விட்டு விட்டு அப்படியே மேசைமேல் சாய்ந்து விடுவர்.அவர்களுக்கு இத்தகவலை சமர்ப்பிக்கிறேன்.. ஆம்,அதாவது உங்கள் கணினி எப்போது ஆக வேண்டும் என்பதை நீங்களே செட் செய்ய முடியும்..மிக இலகுவான வழிமுறைகள்... 

முதலில் Desktop--> Right click--> New-->Shortcut

தோன்றும் Dialog Box இல் இவ்வாறு Type செய்க..
shutdown -s -t 600      இங்கு 600 என்பது   600 Seconds ஐ குறிக்கும்.அதாவது 10 நிமிடங்கள்..


Desktop இல் தோன்றும் Icon ஐ Double click செய்க

அதன் பின் இவ்வாறு Activate Massage வரும்.
அவ்வளவு தான்...இனி நீங்கள்  உங்கள் வேலையை வழமைபோல செய்து கொண்டிருக்கலாம். குறித்த Shuttingdown Time வரும் போது கணணி தானாக Shutdown ஆகும்.இனி தூக்கத்தை FREE யா விடுங்க......நன்றி



Saturday, 30 May 2015

How Jet Engine Works...

குரோம் உலவியில் உள்ள ரகசியங்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க...

நீங்கள் தொடர்ந்து ஒரே கணினியில் குரோம் உலவியை உபயோகித்து வந்தால் ஒவ்வொரு தடவையும் பாஸ்வேர்ட் கொடுப்பதற்கு சிரமப்பட்டு கொண்டு பாஸ்வேர்டை சேமித்து வைத்திருப்போம். இதன் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்காமல் நேரடியாக இந்த தளங்களுக்குள் செல்லலாம். ஆனால் இதில் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சினை பாதுகாப்பு. மற்றவர்கள் உங்கள் கணினியில் உள்ள குரோம் உலவியை ஓபன் செய்தாலும் உலவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்களை கண்டறிந்து உங்கள் ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம். பயர்பாக்சில் Master Password என்ற வசதி இருப்பதால் ஓரளவு ஆபத்து குறைவு ஆனால் குரோமில் அந்த வசதி இல்லை என்பதால் யார் வந்து ஓபன் செய்தாலும் சுலபமாக உங்கள் ஆன்லைன் கணக்கின் பாஸ்வேர்ட்களை அறிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை தவிர்க்க உள்ளது தான் Simple Password Startup வசதி. 







இந்த நீட்சியை குரோம் உலவியில் இணைத்து விட்டு Tools - Extension - Simple Startup Password - Options பகுதிக்கு சென்று உங்களுக்கு என ஒரு பாஸ்வேர்டை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள். இனி ஒவ்வொரு முறையும் உங்கள் கணினியில் உள்ள குரோம் உலவியை ஓபன் செய்யும் பொழுதும் முகப்பு பக்கத்தில் பாஸ்வேர்ட் கேட்கும் பாஸ்வேர்டை சரியாக கொடுத்தால் தான் உலவியை உங்களால் உபயோகிக்க முடியும் ஒரே முறை தவறாக கொடுத்தாலும் உலவி மூடி விடும்.




பாஸ்வேர்ட் தெரியாமல் ஓபன் செய்பவர்களுக்கு முகப்பு பக்கத்தை பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. இனி உலவியில் உள்ள உங்களின் ரகசியங்களை சுலபமாக பாதுகாத்து கொள்ளலாம்.

சுலபமாக ஞாபகம் வைத்திருக்கும் படி Startup கடவுச்சொல்லை கொடுக்கவும். ஒரு வேலை பாஸ்வேர்டை மறந்து விட்டால் குரோம் உலவியை ரீஇன்ஸ்டால் செய்வதை விட வேறு வழி இல்லை.

நீட்சியை டவுன்லோட் செய்ய - Simple Startup Password 


Sunday, 1 February 2015

How a clutch works..

நீங்க Laptop வாங்க போறீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...


Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு,மற்றும் மாணவர்களுக்கும் எப்படியாவது ஒரு 

Laptop வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.


அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால்  வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும். 

ஆனால் சிலருக்கு ஒரு  Laptop வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான  Laptopபை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல்  Laptop வாங்கும் எண்ணம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும். 


இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான  Laptopபை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

 Laptop வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான  Laptop பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட்  Laptop வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....


SONY
HP
DELL
SAMSUNG
TOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் 

Laptopகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...


Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து 

Laptop Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.


எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு  Laptopபை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3


என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். 

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட திறன் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன Technology க்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் Laptop பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz Laptop மொடலை விட 2.80 GHz Laptop Model லின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த Technology இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம். 

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் Computer ரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட Programmeகளை பயன்படுத்தும்பொழுது Computer ரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய Advance Programmeகளை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB,6GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற  AdvanceTechnology கொண்ட RAM நீங்கள் வாங்கும்  Laptop பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த  Laptop வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த HARD DISK. பொதுவாக Computer பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் Computerரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் HARD DISKகின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். Computer இயங்கும் வேகத்திற்கும் இந்த HARD DISKகின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் HARD DISK அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது. 

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை Install செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஓடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் Copy செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் HARD DISK கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஓடியோ வீடியோ Computerரில் Copy செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை Microsoft Office மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் Internet  பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB  HARD DISK  என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த  HARD DISK களில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் Laptopபில்  HARD DISK  Speed குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள். 

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் Laptop வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் Laptop களில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD


பொதுவாக விலை குறைந்த Laptop அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் Laptop களில் இந்த Graphic card இணைந்திருப்பது இல்லை. Graphic card இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த Laptop  குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற Laptop பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த Graphic card இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ? 

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய Laptop பில் Graphic card இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் Laptop பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஓடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த Graphic card இணைந்துள்ள Laptop  நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்தGraphic card இணைந்த Laptop பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த Graphic card Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் Laptop பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் Laptop பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது. 

இந்த Dedicated Graphic Card உங்கள் Laptop பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக Capasity உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால்  Computer எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. Computer மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள  Laptop  நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் Computerரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக Capasity உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது  Computer மெமரி குறைந்து Computer ERROR ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக Capasity உள்ள கிரபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் Laptop பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிரபிக் Softwares பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள Laptop  வாங்கினால் போதும்.

Operating System ( OS)


விலை அதிகம் உள்ள   Laptop வாங்க நினைக்கும் நீங்கள் இந்த Operating System தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து Operating System சரி இல்லை என்றால்  Laptop பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ்  Laptopளில் Widows 8,Winsows 7 Operating Systemதான் Install செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Widows 8,Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.
Windows 8
Windows 8 Pro
Windows 8 Enterprise

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version


இப்படி விண்டோஸ் 7 Versionல் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த Version இணைக்கப்பட்ட  Laptopகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium Version னையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற Version னை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit Graphicமென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.  

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் சிறப்புடன் பயன்படுத்த முடியாது.   
  


அடுத்ததாக புதிய வகை  Laptopகளில் MIC,Wep Camஅனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள்  Laptopபை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் Laptopபில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் Laptopக்கு இலவசமாக கிடைக்கும் Mouse மற்றும்  Laptop Bag கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.